• May 9, 2024

Month: October 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் “சாதனை கலைஞர்களின் சங்கமம்” நிகழ்ச்சி

ஆதிகவி வால்மீகி முனிவர் ஜெயந்தியை முன்னிட்டு சம்ஸ்கார் பாரதி சார்பாக கோவில்பட்டியில் “சாதனைக் கலைஞர்களின் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். காலை முதல் மாலை வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபபட்ட சுமார் 200 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது

பொது தகவல்கள்

போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்

போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு?  எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள். முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் […]

கோவில்பட்டி

செண்பகவல்லியம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா; நிகழ்ச்சிகள் முழு விவரம்

கோவில்பட்டியில் பிரசித்தி பெற் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்கு பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில் […]

கோவில்பட்டி

இஸ்ரேல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம், பகத்சிங் இரத்ததானக் கழக அறக்கட்டளை இணைந்து கோவில்பட்டியில் இன்று இஸ்ரேல் போரைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார் மற்றும் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் தலைவர் மா.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்& கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி முருகன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் […]

தூத்துக்குடி

சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது உணவு பாதுகாப்பு அலுவலர்

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-  உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ன் படியும் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2011-ன் படியும் நுகர்வோரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உணவகங்களில் இனி சூடான உணவுப் பொருட்களான டீ, காபி, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட இதர குழம்பு வகைகளையும் கூட்டு பொரியல் போன்ற சூடான உணவுகளை,பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது என […]

கோவில்பட்டி

சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாணம்

கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த ஸ்ரீதேவி- நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் திருகலான உற்சவ விழா நேற்று மாலை நடைபெற்றது. மாலை 5,30 மணிக்கு மேல் ஸ்ரீதேவி-நீளாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர், இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது, விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, கட்டளைதாரர் கண்ணன்-மங்கத்தாய் ஆகியோர் செய்து இருந்தனர்,

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் பவுர்ணமி பூஜை

கோவில்பட்டி கதிரேசன் கோவில்  ரோட்டில்  உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார்.  சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 25 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

ஓ. பன்னீர்செல்வம் அணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவராக இருந்தவர் கே.சரவணன், இவர் தலைமையில் புருனோ, சாஹீர், அசாருதின், அஜ்ய், பரத், ரியாஸ், பவாஸ், மணி, கிரிஷ், பிரவீன், விஜய் உள்ளிட்ட 25 பேர் ஓ.பி.எஸ்.அணியில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் தலைமையேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட அதிமுக செயலாரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தாய் கழகமான அ.தி.மு.க.வில் மீண்டும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 24ஆயிரத்து 748 வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2024 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று வெளியிட்டார்.  விளாத்திகுளம் தொகுதியில் ஆண் 101441, பெண் 104839 இதர வாக்காளர்கள் 19 என மொத்தம் 2,06,299 உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் ஆண் 135415, பெண் 141442 இதரர் 74 என மொத்தம் 276931 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செந்தூர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 30ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு 30.10.2023  அன்று அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.  மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், […]