• May 20, 2024

சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது உணவு பாதுகாப்பு அலுவலர் உத்தரவு

 சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது உணவு பாதுகாப்பு அலுவலர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ன் படியும் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2011-ன் படியும் நுகர்வோரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உணவகங்களில் இனி சூடான உணவுப் பொருட்களான டீ, காபி, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட இதர குழம்பு வகைகளையும் கூட்டு பொரியல் போன்ற சூடான உணவுகளை,பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது என உத்தரவிடப்படுகிறது. 

இந்த உத்தரவையும் மீறி மேற்கண்ட உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள் மீது முதல் தடவை 2 ஆயிரம்  ரூபாய், இரண்டாம் தடவை 5 ஆயிரம்  ரூபாய், மூன்றாம் முறை 10 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட கடையின் இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டித் தரப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையினை வைக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் மாரியப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *