• May 20, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 24ஆயிரத்து 748 வாக்காளர்கள்

 தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 24ஆயிரத்து 748 வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2024 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று வெளியிட்டார். 

விளாத்திகுளம் தொகுதியில் ஆண் 101441, பெண் 104839 இதர வாக்காளர்கள் 19 என மொத்தம் 2,06,299 உள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் ஆண் 135415, பெண் 141442 இதரர் 74 என மொத்தம் 276931 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்செந்தூர் தொகுதியில் ஆண் 114749, பெண் 120686 இதரர் 31 என மொத்தம் 235466 வாக்காளர்கள் உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆண் 108205, பெண் 111313, இதரர் 5 என மொத்தம் 219523 வாக்காளர்கள் உள்ளனர். 

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் ஆண் 116535, பெண் 121145, இதரர் 48 என மொத்தம் 237728 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவில்பட்டி தொகுதியில் ஆண் 121600, பெண் 127168, இதரர் 33 என மொத்தம் 248801 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண் 697945, பெண் 726593, இதரர் 210 என மொத்ததம் 14,24,748 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024 இன்று (27.10.2023) முதல் தொடங்கப்பட்டு 9.12.2023 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம்-6), நீக்குதல் (படிவம்-7), திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் (படிவம்-8) ஆகியவற்றை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1622 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 898 வாக்குச்சாவடி அமைவிட பள்ளி/கல்லூரிகளிகளிலும் வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ள நியமன அலுவலர்களிடம் வாக்காளர்கள், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி முடிய நேரில் அளித்திடலாம்.

4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 1.1.2024 ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

மீதமுள்ள ஏப்ரல்-1, ஜுலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய நாட்களில் 18 வயது பூர்த்தியடைந்து தகுதியடையும் விண்ணப்பதாரர்களின் (முன்னதாகவே பெறப்பட்ட) விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தக் காலத்தில் அந்தந்த காலாண்டுகளில் தகுதியடையும் விண்ணப்பங்கள் அந்தந்தக் காலாண்டின் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம். மேலும் படிவம் 6 பி யின் மூலம் வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணிணையும் இணைத்திடலாம்.

மேற்கண்டவாறு ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *