Month: June 2023

கோவில்பட்டி

எழுத்தாளர் உதயசங்கருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தலைமையில் வாழ்த்து

தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளை தந்த கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மர் ஆகியோர் சாகித்ய அகாடமி விருதும்,சபரிநாதன் சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார் விருதும் விருது பெற்று இருக்கிறார்கள்.   இவர்களை தொடர்ந்து கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் இதுவரை 150 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில்51 நூல்கள் குழந்தைகளுக்கானவை. 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கானவை ,9 நூல்கள் இளையோருக்கானவை, 68 நூல்கள் மொழிபெயர்ப்பு […]

கோவில்பட்டி

இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை

கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஜெயபிரகாஷ் நாராயணசாமி என்பவர் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஊராட்சிகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சார்பில் , கோவில்பட்டி  நகராட்சி ஆணையருக்கும் தூத்துக்குடி மாவட்ட […]

கோவில்பட்டி

கி.ரா. நினைவரங்கத்தில் கிராமிய பாடல் நிகழ்ச்சி

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் கிடை- கரிசல் கலை இலக்கிய களம் கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்றது ஆசிரியை அமலபுஷ்பம் மண்ணின் கிராமிய பாடல்களை பாடினார். கதை சொல்லி ஆர்.ஜெ மணிகண்டன் கி.ரா எழுதிய கொத்தை பருத்தி கதையை பகிர்ந்தார்.இந் நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஜி சத்திய பாலன்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வ.பாலமுருகன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கோவில்பட்டியின் கிளைச் செயலாளர் முத்துராமன், கிளை […]

கோவில்பட்டி

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர்  துண்டு பிரசுரம் வினியோகம்

கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உ றுப்பினர் கடம்பூர் ராஜு சார்பில் அக்கட்சியினர் கோவில்பட்டி மற்றும் தொகுதி முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தெருவாக சென்று வீடு மற்றும் கடைகள் தோறும் இந்த துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. இரட்டை இலை சின்னத்துடன் எடப்பாடி பழனிசாமி, கடம்பூர் ராஜு படங்கள் பொறிக்கப்பட்ட அந்த பிரசுரத்தில், கோவில்பட்டி நகராட்சி சாலை பணிகளை சீரமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று  வந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதிய தாசில்தார் லெனின் பதவி ஏற்பு

கோவில்பட்டி தாசில்தார் சி.சுசிலா மே ,மாதம் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து  புதிய  தாசில்தாராக  விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் யு.வசந்த மல்லிகா நியமிக்கப்பட்டார். புதிய தாசில்தாராக பதவி ஏற்று ஒரு மாதத்தில்  தாசில்தார் வசந்த மல்லிகா, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. ராஜாராம் (வயது 64)என்பவர் விமான நகர் பகுதியில் உள்ள வீட்டு மனையில் வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்க […]

கோவில்பட்டி

`ஆதனின் பொம்மை’ நாவலுக்காக ஒரு வருடம் ஆய்வு செய்தேன்- எழுத்தாளர் உதயசங்கர்

கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கபட்டு இருக்கிறது. விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த உதயசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆதனின் பொம்மை நாவலுக்கு விருது கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவல் மிக முக்கியமான நாவல். தமிழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய ஒரு நாவல். இப்போது இருக்கக்கூடிய சமகால இந்திய பின்புலத்தை வைத்து பார்க்கும் போது இந்த நாவலுக்கு கிடைத்துள்ள விருது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிப்பு

கோவில்பட்டியை சேர்ந்த  எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்காக சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணுடன் கந்தக வாசனையும் கலந்தே வீசும் பூமி கோவில்பட்டி. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளைத் தந்த ஊர் என்பது பெருமையான விஷயம். இந்த ஊரை சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மர் ஆகியோர் சாகித்யா அகாடமி விருதும்,சபரிநாதன் சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார் விருதும் ஏற்கனவே விருது பெற்று இருக்கிறார்கள்.   இவர்களை […]

கோவில்பட்டி

இணையவழி யோகாசன போட்டி; 350 பேர் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் இணையவழி யோகாசன போட்டி நடத்தப்பட்டது. ஏ.கே.ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட்அசோசியேசன், பெஸ்ட் லைப் பவுண்டேசன், சின் யோகா பவர், இதியன் யோக அசோசியேசன்  தமிழ்நாடு  ஆகியவவை  சார்பில் இந்த  போட்டிகள் நடத்தப்பட்டன, ஆண்,பெண் தனித்தனியாக பொது, குரூப், சாம்பியன் ஆகிய வகை போட்டிகள் வெவ்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டன.போட்டிகளின் நடுவர்களாக கிருஷ்ணவேணி, குருலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழவினர் இருந்தனர். இணையதள யோகா போட்டியில் மொத்தம் 350 பேர் கலந்து […]

ஆன்மிகம்

பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் 8 அதிசயங்கள்   

இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள்.  இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே. பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது. பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் […]

ஆன்மிகம்

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம்

ஊதுபத்தி ஏற்றுவது இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம் அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  ஊதுபத்தியை ஏற்றி வைத்தவுடன் அதிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும் அது புகைந்து சாம்பலானாலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும் பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். […]