இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை
![இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை](https://tn96news.com/wp-content/uploads/2023/06/kvp_municipal-1-850x479.jpg)
கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஜெயபிரகாஷ் நாராயணசாமி என்பவர் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.
இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஊராட்சிகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சார்பில் , கோவில்பட்டி நகராட்சி ஆணையருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)