கி.ரா. நினைவரங்கத்தில் கிராமிய பாடல் நிகழ்ச்சி
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் கிடை- கரிசல் கலை இலக்கிய களம் கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்றது ஆசிரியை அமலபுஷ்பம் மண்ணின் கிராமிய பாடல்களை பாடினார். கதை சொல்லி ஆர்.ஜெ மணிகண்டன் கி.ரா எழுதிய கொத்தை பருத்தி கதையை பகிர்ந்தார்.
இந் நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஜி சத்திய பாலன்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வ.பாலமுருகன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கோவில்பட்டியின் கிளைச் செயலாளர் முத்துராமன், கிளை பொருளாளர் மாரிமுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே பி ராஜகோபால், பேராசிரியர் ஜெயக்குமார், பொறியாளர் மெகாவேல், திரைப்பட தயாரிப்பாளர் சரக் குட்டி, திரைப்பட இயக்குனர் வரதன் செல்லப்பா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.