தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர்  துண்டு பிரசுரம் வினியோகம்

 தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர்  துண்டு பிரசுரம் வினியோகம்

கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உ றுப்பினர் கடம்பூர் ராஜு சார்பில் அக்கட்சியினர் கோவில்பட்டி மற்றும் தொகுதி முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தெருவாக சென்று வீடு மற்றும் கடைகள் தோறும் இந்த துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்துடன் எடப்பாடி பழனிசாமி, கடம்பூர் ராஜு படங்கள் பொறிக்கப்பட்ட அந்த பிரசுரத்தில், கோவில்பட்டி நகராட்சி சாலை பணிகளை சீரமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று  வந்த சாலை பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ரத்து செய்த நகராட்சி நிர்வாகமே, சாலை பணிகளை உடனே தொடங்கிடு என்று குறிப்பிடப்பட்டு  இருந்தது.

மேலும் கோவில்பட்டி நகராட்சியில் 275 சாலைகளை சீரமைக்க மூன்றாவது கட்டமாக ரூ,31 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும் என 11.10.2020 அன்று முதல் அமைச்சராக இருந்த  எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டு 25.1.2021 அன்று ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டு 8.2.2021 முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த சாலைப்பணிகளில் ரூ.12.17 கோடி மதிப்பிலான 137  சாலை பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மக்களின் நலனை சிந்திக்காமல் 4.3.2022 அன்று ரத்து செய்து மக்களை வாட்டி வதைக்கும் செயலற்ற விடியா தி.மு.க. அரசே, அ.தி.மு.க.  ஆட்சியில் கொண்டு வந்த சாலை பணிகளை உடனே தொடங்கிடு

இப்படிக்கு கோவில்பட்டி நகர அ.தி.மு.க. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *