எழுத்தாளர் உதயசங்கருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தலைமையில் வாழ்த்து
தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளை தந்த கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மர் ஆகியோர் சாகித்ய அகாடமி விருதும்,சபரிநாதன் சாகித்யா அகாடமியின் யுவ
புரஸ்கார் விருதும் விருது பெற்று இருக்கிறார்கள்.
இவர்களை தொடர்ந்து கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது
அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் இதுவரை 150 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில்51 நூல்கள் குழந்தைகளுக்கானவை. 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கானவை ,9 நூல்கள் இளையோருக்கானவை,
68 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார்.
ஆதனின் பொம்மை என்ற நாவலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கபப்ட்டுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன,
கோவில்பட்டி நகராட்சி 31வது வார்டு மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சீனிவாசன் தலைமையில் எழுத்தாளர் உதயசங்கரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்..