அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்; டி.ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை அடுத்த புழலில் அதிமுக சார்பில் நடந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி :- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து…
பதில் :- கோ பேக் ஸ்டாலின் பாட்னாவில் டிரெண்ட் ஆனது. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவர் வெளியூரில் புலியை பிடிப்பதாக கூறி புலிக்கு பயந்தவர்கள் தம் மீது படுத்து கொள்ளுங்கள் என கூறுவது போன்று உள்ளது. இவர் சென்றதால் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை.. தேர்தலுக்கு இன்னும் 10மாதம் உள்ளது. அரசியலில் நண்பன், எதிரி என யாரும் இல்லை. இப்போது ஒன்று கூடியுள்ளவர்கள் தொடர்வார்களா என சந்தேகமாக உள்ளது. 10 மாதத்தில் பல மாறுதல்கள் வரும் . திமுக ஆட்சி தானாக விழுந்து விடும் .கவர்னர் டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் ஒரு வாரம் தங்க உள்ளதாக தகவல். திமுக ஆட்சியின் அவல நிலையை உள்துறை அமைச்சர், பிரதமரிடம் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.திமுக ஆட்சிக்கு 356 பிரிவை பயன்படுத்தினால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்க்கள். இவர்களுக்கு டிஸ்மிஸ் ராசி. ஏற்கனவே 89 – 91ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட வரலாறு உண்டு.. கவுரவர்கள், பாண்டவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும், கவுரவர்கள் வீழ்ச்சிக்கு துச்சாதனன், சகுனி காரணமாக இருந்தது போல திமுகவில் பல துச்சாததன், சகுனிகள் உள்ளார்கள். அவர்களே இந்த ஆட்சியை வீழ்த்தி விடுவார்கள்.
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்.
கேள்வி :- 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளதே…
பதில் : 500 மதுக்கடைகள் மூடல் என்பது ஏமாற்று செயல்.ஆட்சேபனை மற்றும் வருமானம் குறைந்த கடைகளே மூடப்பட்டுள்ளது. சமூக பிரச்சனை எனும் போது அதனை ஒரு பக்கம் விளம்பரம்.பின்பு அதனை குறைப்பதற்காக வழியை சொன்னோம்.நாங்கள் படிப்படியாகதான் குறைப்போம் என்று சொன்னோம்.
ஆனால் ஒரு கால கட்டத்தில் மதுவே தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ஆனால் நீங்கள் நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன சொன்னீர்கள்.கருப்பு சட்டையை போட்டுக்கொண்டு ஒவ்வொரு அமைச்சர்களும் அப்போது அவர்கள் வீட்டின் முன்னர் பாதாகை ஏந்தி தமிழக அரசே உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்து என்று சொன்னார்களா இல்லையா.அப்படி என்று சொல்லிவிட்டு டாஸ்மாக் என்ற அரக்கனே தேவையில்லை என்றார்கள்.இப்போது ஏன் அந்த அரக்கனை தூக்கி சுமந்துகொண்டுள்ளீர்கள்.மூடிவிட்டு போகவேண்டியதுதானே.அதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்கிறார்கள்.
இன்றைக்கு முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர் கருப்பு சட்டை போட்டுக்கொண்டு நின்றார்.. உதயநிதி,கனிமொழி உள்ளிட்ட அனைவரும் மது விலக்கு தொடர்பாக போராட்டம் செய்தார்கள்.இப்போது ஆட்சிக்கு வந்துள்ள அவர்கள் மதுவை ஒழித்துவிட்டார்களா.தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கடைகளை மூடிவிடுங்கள். ஏன் இந்த இரட்டை வேடம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஓரு பேச்சு.ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பேச்சு. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போது கேட்டீர்கள்.இப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது.அதனை பாராட்டிவிட்டு போகவேண்டியதுதானே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று இதே முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். ஏன் அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள்.கோபாலபுரத்தின் பொக்கிஷமாக,கருவூலமாக உள்ளவர் இன்றைக்கு மாட்டிகொள்வார் என்று ஒரு திரையை போட்டு அவரை பேசவிடாமல்
தடுக்க எல்லாவிதமாக முயற்சி நடக்கிறது. ஆனால் அமலாக்கத்துறை பார்வையில் செந்தில்பாலாஜியும் இப்போது உள்ள அமைச்சர்களும் தப்பபோவதில்லை.
கேள்வி : நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல் உள்ளதே
பதில் : அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியல் என்பது கடல், யார் வேண்டுமானாலும் குதிக்கலாம், நீச்சல் தெரிந்தவர்கள் அதில் கரை சேரலாம், நிச்சல் தெரியாதவர்கள் கடலில் மூழ்கி பின்னர் மிதப்பார்கள்.
கேள்வி : உங்களுக்கும்,பாஜகாவுக்கு உறவு எப்படி உள்ளது.
பதில் : அண்மை காலமாக பாஜக -கழகம் இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த விமர்சனங்கள் முடிவுக்கு வந்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாதவர்கள் கூறும் கருத்துக்களுக்கு நாம் எதிர்வினை ஆற்ற முடியாது.மாநில தலைவர், மாநில பொறுப்புகளில் உள்ளவர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்து விட்டோம். தற்போது எந்த பிரச்சனையும் இல்லை, பேனா சின்னம் கடலில் அமைக்க கூடாது. பேரிடர் காலங்களில் சென்னை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.வரிப்பணத்தில் பேனா சின்னம் அமைப்பதை கைவிட்டு அவர்களது சொந்த பணத்தில் அறிவாலயத்தில் பேனா சின்னம் வைத்து கொள்ளலாம். கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்டுள்ள வழக்கில் நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.