கோவில்பட்டியில் திருக்குறள் `கரண ஆசான்’ பயிற்சி வகுப்பு
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி திருக்குறள் மாவட்டம் சார்பாக, “கரண ஆசான் பயிற்சி” வகுப்பு தொடக்கவிழா மைக்ரோபாய்ண்ட் கணினி மையத்தில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்டத்தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார், ஒய்.எம்.சி.ஏ. கோவில்பட்டி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.தமிழரசன் வரவேற்று பேசினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி `கரண ஆசான்’ பயிற்சி குறித்து நோக்கவுரை ஆற்றினார்,
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத்தலைவர் ப.முத்துச்செல்வம், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மகளிர் மேம்பாட்டுத்துறைத் தலைவர் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி குறள்மாவட்டப் புரவலர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் மேரிஷீலா, உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி குறள் மாவட்ட பொருளாளர் முருகன், மேனாள் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மனோகர், மலர்ச்செல்வி மற்றும் செண்பக பிரீத்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் முனைவர். முருகசரஸ்வதி நன்றி கூறினார்.