கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிப்பு

 கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிப்பு

கோவில்பட்டியை சேர்ந்த  எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்காக சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் மண்ணுடன் கந்தக வாசனையும் கலந்தே வீசும் பூமி கோவில்பட்டி. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளைத் தந்த ஊர் என்பது பெருமையான விஷயம். இந்த ஊரை சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மர் ஆகியோர் சாகித்யா அகாடமி விருதும்,சபரிநாதன் சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார் விருதும் ஏற்கனவே விருது பெற்று இருக்கிறார்கள்.  

இவர்களை தொடர்ந்து 6- வது கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனது20 வது வயதில் கவிதை எழுதத் தொடங்கி, பிறகு சிறுகதைகள் எழுதியவர் உதயசங்கர்.

எழுத்தாளர் உதயசங்கர் இதுவரை 150 நூல்கள் எழுதியுள்ளார். இதில் குழந்தைகளுக்காக 51 நூல்களை எழுதி இருக்கிறார். இதில் 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கான வை ,9 நூல்கள் இளையோருக்கானவை,
68 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார்

 இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும் தாயார் கமலம். எழுத்தாளர் உதயசங்கர்  மல்லிகா என்பவரை 1987 ம்ஆண்டு ஏப்ரல் 12, அன்று திருமணம் செய்துகொண்டார். உதயசங்கருக்குநவீனா, துர்கா ஆகிய  2 மகள்கள் உள்ளனர், இருவரும் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆவார்கள்.

மனைவியுடன் உதயசங்கர்

எழுத்தாளர் உதயசங்கர்  இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். ரெயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை. என்ற இளையோர் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கபட்டு இருக்கிறது. இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *