இணையவழி யோகாசன போட்டி; 350 பேர் பங்கேற்பு

 இணையவழி யோகாசன போட்டி; 350 பேர் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் இணையவழி யோகாசன போட்டி நடத்தப்பட்டது. ஏ.கே.ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட்அசோசியேசன், பெஸ்ட் லைப் பவுண்டேசன், சின் யோகா பவர், இதியன் யோக அசோசியேசன்  தமிழ்நாடு  ஆகியவவை  சார்பில் இந்த  போட்டிகள் நடத்தப்பட்டன,

ஆண்,பெண் தனித்தனியாக பொது, குரூப், சாம்பியன் ஆகிய வகை போட்டிகள் வெவ்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டன.போட்டிகளின் நடுவர்களாக கிருஷ்ணவேணி, குருலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழவினர் இருந்தனர்.

இணையதள யோகா போட்டியில் மொத்தம் 350 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கோவில்பட்டி விஸ்வகர்மா பள்ளியில்  நடைபெற்றது.

இப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அரிமா சங்க செயலாளர் வன்னியன், கஸ்தூரிபா பள்ளிதலைமை ஆசிரியர் சரஸ்வதி சுபா ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் பாபு ஆல்வா தற்காப்பு பயிற்சி பள்ளி செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *