பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் 8 அதிசயங்கள்   

 பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் 8 அதிசயங்கள்   

இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள்.

இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள்.  இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே.

பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது.

பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் 8 அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

4. இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.

5. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.

6. இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை. மீந்து போய் வீணானதும் இல்லை.

7. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.

8. சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் … அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

தகவல்: காசிவிஸ்வநாதன்-திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *