Month: June 2023

செய்திகள்

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ; கவர்னர் உத்தரவு

அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி கைதான போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கைப்பட்டார்.பின்னர் அவருக்கு இருதய வால்வுகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட […]

கோவில்பட்டி

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ; கோவில்பட்டியில் உதவி

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக் கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஐப்பான் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர்.1989 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த சிவதாஸ் மீனா, முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். பின்னர், கோவில்பட்டி உதவித் கலெக்டராகவும், வேலூர் கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு

தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கி வருகிறது.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.விருதினை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் ஆகியோர் […]

கோவில்பட்டி

பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கம் சார்பில் கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து லாயல் மில் காலனியில் உள்ள பூங்காவில் ஏழு வகையான 40க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது, நிகழ்ச்சிக்கு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்,ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி மாரியப்பன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்,இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தனம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்,இதில் ஊராட்சி செயலாளர் ரத்தினகுமார்,வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி […]

கோவில்பட்டி

காளி சண்டி கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அமைந்துள்ள காளி சண்டி கோவிலில் வராகி அம்மன் சன்னதியில் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா விமரி சையாக நடைபெற்று நிறைவு விழா 27.6.23 செவ்வாய்கிழமை நடைபெற்றது.மாலை 5 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து வராகி அம்மன் உற்சவ சிலை அலங்கரிக்கபட்டு பால்குடம் அக்னி சட்டி எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மந்தித்தோப்பு வழியாககோவில் வளாகத்தை அடைந்தது.பின்னர் மாலை 6மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச பூஜை யாகசாலை பூஜை பூர்ணாகுதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தரமற்ற சாலையா? பணியை நிறுத்தி பா.ஜனதா போராட்டம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமத்தில் ரூ.48 லட்சம்  மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தார் சாலை அமைக்கும் பணிகள் தரமானதாக இல்லை என்றும் தரமற்ற முறையில், பெயரளவிற்கு சாலை அமைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும்  சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ஜல்லி கற்கள் கையில் அள்ளும் அளவிற்கு தான் இருப்பதாக கூறி அப்பகுதி பொது மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பகலில் திடீரென பணிகளை தடுத்து நிறுத்தி […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன `மயில் கோலா’ மீன்

தூத்துக்குடியை அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாத தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள்.  இந்த நிலையில் நேற்று  அசோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அவர்கள் வீசிய வலையில் அரிய வகை  `மயில் கோலா’ மீன் சிக்கியது.  இந்த மீனுக்கு  மயில் போன்று பெரிய தோகை இருப்பதால் இன்று மீன் மயில் மீன் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 7 […]

செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் […]

தூத்துக்குடி

பொது கலந்தாய்வு மூலம் 115 போலீசார் இடமாறுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த இந்த கலந்தாய்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் […]

கோவில்பட்டி

தொலைதூர பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்க்க மாணவர்களுக்கு பயிற்சி

கடந்த 1908 ஜூன் 30ம் தேதி ரஷ்யாவில் விண் கற்கள் பூமியில் மோதிய தினத்தை உலக விண்கற்கள் காணும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வான் அறிவியல் கழகத்தின் சார்பில் உலக விண்கற்கள் காணும் தினத்தை முன்னிட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட கோவில்பட்டியில் பள்ளி  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், […]