• May 20, 2024

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ; கோவில்பட்டியில் உதவி கலெக்டராக பணியாற்றியவர்

 தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ; கோவில்பட்டியில் உதவி கலெக்டராக பணியாற்றியவர்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்

கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஐப்பான் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர்.
1989 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த சிவதாஸ் மீனா, முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். பின்னர், கோவில்பட்டி உதவித் கலெக்டராகவும், வேலூர் கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய இவர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.
இப்படி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *