தொலைதூர பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்க்க மாணவர்களுக்கு பயிற்சி
![தொலைதூர பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்க்க மாணவர்களுக்கு பயிற்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/06/4ca9089e-f5f4-47fc-a3ae-bec9bad7c7e2-850x560.jpeg)
கடந்த 1908 ஜூன் 30ம் தேதி ரஷ்யாவில் விண் கற்கள் பூமியில் மோதிய தினத்தை உலக விண்கற்கள் காணும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வான் அறிவியல் கழகத்தின் சார்பில் உலக விண்கற்கள் காணும் தினத்தை முன்னிட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், மேனாள் வேளாண் அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-1-1-1-1024x1024.jpg)
நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி வான் அறிவியல் கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி கலந்துகொண்டு தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்ப்பது குறித்தும், விண்கற்கள் தொடர்பாகவும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அருள் காந்தராஜ்,ஜோதி, டாரதி செல்வின்,கணேசன், மகாதேவி. ஆகாஷ் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில் அறிவியல் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)