• May 20, 2024

தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி

 தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக காங்.தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். காங்கிரஸ் மாநில தலைவராக எனக்கு உரிய பணியை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசியல் தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவுடன் ஆலோசனை நடத்தினேன்.
பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன்.

தமிழகத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 72% வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இன்றைக்கும் என்னுடைய கருத்து எவ்வளவு தொகுதி பெறுகிறோம் என்பதல்ல… எவ்வளவு வெற்றி பெறுகிறோம் என்பது தான். நான் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி  கூறினார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *