• May 9, 2024

Month: May 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில் -கோவில்பட்டி கல்வி மாவட்ட த்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் என்.ஜோதி 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் , எஸ்.சுபாஸ்ரீ 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் , ஆர்.தானு ஸ்ரீ , எஸ்.லத்திகா 590 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பிடித்து சாதனை படைத்த மாணவிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டல […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி: டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு டெல்லி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது அதே போல் இந்த ஆண்டும் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்ற தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும் பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். வேலாயுதபுரம் முன்னாள் நாடார் சங்கத் […]

செய்திகள்

மூத்தோருக்கான மாநில பூப்பந்து போட்டி

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டி குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளியில் மாநில அளவில் மூத்தோருக்கான பூப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.இதில் நெய்வேலி, திருப்பூர், சிதம்பரம், சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், தூத்துக்குடி, திருவாரூர், கடலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.இப்போட்டியில் சிதம்பரம் டி.பி.பி.சி அணியினர் முதல் இடத்தையும், நெய்வேலி பி.பி. சி அணியினர் இரண்டாம் இடத்தையும், திருச்சி ஆர்.ஜே.ஜே.எஸ். அணியினர் மூன்றாம் இடத்தையும், தாடிக்கொம்பு ஏ.ஆர். ஹாஸ்பிடல் அணியினர் நான்காம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மகளிர் ஆக்கி : ஈரோடு அணி சாம்பியன்

கோவில்பட்டி தெற்குத் திட்டங் குளம் பாரதி ஆக்கி கிளப் நடத்தும் மாநில அளவிலான பெண்களுக்கான ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி-2023 கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இதில் 10 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.இறுதிப் போட்டியில் ஈரோடு கே. ஓ. எம் ஆக்கி கிளப் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் உடுமலைப்பேட்டை எல் . எம். சி. ஆக்கி கிளப் அணியினரை தோற்கடித்து சா ம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். மூன்றாம் மற்றும் நான்காம் […]

கோவில்பட்டி

கி. ரா. நினைவு மண்டபத்தில் இலக்கிய சொற்பொழிவு

கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கிளை தலைவர் அமலபுஷ்பம் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர். ராஜகோபால் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய என் வகுப்பறை கதைகள் என்ற நூலினை சாகித்திய அகடமி விருது பெற்ற சோ .தர்மன் வெளியிட்ட்டு இலக்கிய சொற்பொழிவுரையாற்றினார் . வெளியிடப்பட்ட நூலினை […]

கோவில்பட்டி

பா. ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட sc/st பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மத்தியில் ஆளும் பா. ஜனதா அரசை கண்டித்தும் பழங்குடி சமுதாயம் என்பதால் இந்திய நாட்டின் குடியரசு தலைவர் முர்மு வை அழைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், மற்றும் துரை ராஜ், காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில் sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்மேலும் pcc உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தென் மாவட்ட ஆக்கிப்போட்டி : யங் சேலஞ்சர்ஸ் அணிக்கு சுழற்கோப்பை -ரொக்கப்பரிசு

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் அணியினரும் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியினர் விளையாடினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டிருந்தனர். போட்டி டிராவில் முடிந்ததால் பெனால்டிக் ஸ்ட்ரோக் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெண்கள் ஆக்கி: ஈரோடு, திருப்பூர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி நடந்து வருகிறது.நேற்று மாலை நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி பெண்கள் அணியினரும் ஈரோடு கே ஓ எம் அணியினரும் விளையாடினர்.இதில் ஈரோடு கே ஓ எம் அணியினர் அபாரமாக ஆடி 8-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர் .இரண்டாவது அரை இறுதி போட்டியில் திருப்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி […]

தூத்துக்குடி

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்ட அறிமுக விழா; தூத்துக்குடியில் 30-ந்தேதி நடக்கிறது

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்தும் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்ட அறிமுக விழா கலெக்டர் அலுவலக முத்து அரங்கத்தில் 3௦-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 10 மணிக்கு நடக்கிறது. ,மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்குகிறார். தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சொர்ணலதா திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுமையம் உதவி இயக்குனர் […]