• May 20, 2024

கோவில்பட்டியில் பெண்கள் ஆக்கி: ஈரோடு, திருப்பூர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி

 கோவில்பட்டியில் பெண்கள் ஆக்கி: ஈரோடு, திருப்பூர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி நடந்து வருகிறது.
நேற்று மாலை நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி பெண்கள் அணியினரும் ஈரோடு கே ஓ எம் அணியினரும் விளையாடினர்.
இதில் ஈரோடு கே ஓ எம் அணியினர் அபாரமாக ஆடி 8-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்

.
இரண்டாவது அரை இறுதி போட்டியில் திருப்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணியை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று ஞாயிறு )காலை 6:30 மணி அளவில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணியினரும் திட்டங்குளம் பாரதி அணியினரும் விளையாட உள்ளனர்.
7.30 மணி அளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஈரோடு கே ஓ எம் அணியினரும் திருப்பூர் அணியினரும் விளையாட உள்ளனர் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பரிசுகள் வழங்க உள்ளனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *