கோவில்பட்டியில் தென் மாவட்ட ஆக்கிப்போட்டி : யங் சேலஞ்சர்ஸ் அணிக்கு சுழற்கோப்பை -ரொக்கப்பரிசு
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் அணியினரும் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியினர் விளையாடினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டிருந்தனர்.
போட்டி டிராவில் முடிந்ததால் பெனால்டிக் ஸ்ட்ரோக் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமிஅணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டிக்கு முன்பாக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் இலுப்பை யூரணி அம்பேத்கார் ஆக்கி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி யை வெற்றி பெற்றனர் போட்டியின் நடுவர்களாக காளிதாஸ் சுரேந்திரன் ராஜா சுதாகர் கார்த்திக் ராஜா ஆகியோர் செயல்பட்டனர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை சியாமளா அண்ட் கோ உரிமையாளர் சதீஷ் மற்றும் தொழிலதிபர்கள் சண்முகராஜா, கமலேஷ் ,நாகராஜ், ரமேஷ் ஆகியோரும், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், சண்முகராஜ், செண்பகமூர்த்தி ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைத்தலைவர் மணிமாறன் பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோரும் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகடமி செயலாளர் மாரியப்பன், கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைச் செயலாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்றார் இறுதியில் 33 வது நகர் மன்ற உறுப்பினர் சண்முக ராஜ் நன்றி கூறினார்