• May 20, 2024

Month: February 2023

தூத்துக்குடி

ஏப்ரல் 9 ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவர் அன்றிலிருந்து 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முன்பு வரும் 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேன் மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் […]

கோவில்பட்டி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பங்கு சந்தையில் சொத்து மதிப்புகளை உயர்த்தி காட்டி பல லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், நீட தேர்வை ரத்து செய்யவேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட  ஜூனியர் ஆக்கி அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு; கோவில்பட்டியில் 26-ந்

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனைவர் செ. குரு சித்ர சண்முக பாரதி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் ஆண்கள்  சாம்பியன் போட்டி  கோவில்பட்டியிலும் பெண்கள் சாம்பியன் போட்டி தேனியிலும் மார்ச்  முதல் வாரத்தில் நடக்க இருக்கின்றது    அந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்  ஆக்கி அணி விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு பிப்ரவரி 26 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களின்  பஸ் படிக்கட்டு பயணத்தை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை -முக்கிய

கோவில்பட்டி வட்டத்தில் பஸ்தொங்கியபடி கல்லூரி  படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இதுபற்றி பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. இந்த நிலையில் இன்று காலையில் இது பற்றி இன்றைய தினம் காலை www.tn96news.com  இணையதளத்தில் செய்தி வெளியானது. இந்த நிலையில் பகலில்  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  அறிவுரைக்கிணங்க கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ,அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாலையின் இருபுறமும் பெருகிய ஆக்கிரமிப்புகள்: அகற்றக்கோரி கோட்டாட்சியரிடம் மனு

கோவில்பட்டி அணைத்து சமூக ஆர்வலர்கள், கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டது இருந்ததாவது:- கோவில்பட்டி நெடுஞ்சாலை துறைக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது. இது பொதுமக்களுக்கு நடந்து செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மிகுந்த இடையூறாகவும் போக்குவரத்துக்கு மிகுந்த நெருக்கடியாகவும் உள்ளது, இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, லட்சுமிமில் மேம்பாலம் முதல் ரெயில்நிலைய மேம்பாலம் வரை, புதுர்ரோடு, கடலையூர் ரோடு, […]

கோவில்பட்டி

கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி கடையடைப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது இப்பகுதி மக்களின்  நீண்டநாள் கோரிக்கை ஆகும். மேலும் கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பல ரெயில்கள் தற்போது கடம்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காமல்  செல்வதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே அனைத்து ரெயில்களையும் நின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது,. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பஸ் பயணம்

கோவில்பட்டி நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் வளர்ச்சிக்கு ஏற்ப வசதிகள் உயரவில்லை. கல்லூரிகள் அதிகரித்து விட்டன, அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய பஸ் வசதி இல்லாதது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒவ்வொரு கல்லூரி நேரத்தையும் கணக்கிட்டு அரசு டவுண் பஸ்கள் இயக்கவேண்டும். ஆனால் அப்படி இயக்குவது இல்லை. தனியார் பஸ்கள் போட்டி போட்டு இயக்கப்படுகின்றன. அதில் இருக்கைகள் குறைவு. இதனால் அதில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிசெல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பஸ் படிக்கட்டில் […]

செய்திகள்

இறகுப்பந்து போட்டியில் விளையாடிய  போது மாரடைப்பால் வட்டாட்சியர் உயிரிழந்தார்; முதல்-அமைச்சர் இரங்கல்

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. வட்டாட்சியர் அதியமானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். […]

செய்திகள்

பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது, தி.மு.க. மீதான  அதிருப்தி எங்களுக்கு வாக்குகளாக மாறும்-டி.ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் திமுகவினர் செய்துவரும் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியின்போது கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜி ரூம் போட்டுச் சிந்திப்பதில் கில்லாடி.அவரைப்போல ரூம் போட்டு புதிது புதியதாக யுக்திகளைச் சிந்திக்கின்ற ஒரு அமைச்சர் உலகத்திலேயே எங்கும் இருக்க முடியாது.அதுபோல் ரூம் போட்டு ஊழல் செய்வதிலும் சரி,விஞ்ஞான முறையில் சிந்திப்பதற்கும் சரி,நவீன முறையில் சிந்திப்பதற்கும் சரி […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கலைப்பிரிவினர் 2  நாட்கள் பிரசாரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  இ.வி.கே.எஸ்..இளங்கோவனை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவினர் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் இரண்டு நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.  நேற்று, மற்றும்  நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்கள் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் காங்கிரஸ்  கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர்கள், பாபு, மயிலை அசோக்குமார், மாவட்ட கலைப்பிரிவின் தலைவர்கள் ஜாபர் அலி, அர்ஜுன் மற்றும் நிர்வாகிகள் […]