நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
![நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2023/02/IMG-20230221-WA0112-850x560.jpg)
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பங்கு சந்தையில் சொத்து மதிப்புகளை உயர்த்தி காட்டி பல லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், நீட தேர்வை ரத்து செய்யவேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சேது ராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், முனியசாமி, நகர செயலாளர் சரோஜா, உதவி செயலாளர்கள் அலாவுதீன் , சண்முகவேல் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)