தூத்துக்குடி மாவட்ட  ஜூனியர் ஆக்கி அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு; கோவில்பட்டியில் 26-ந் தேதி நடக்கிறது

 தூத்துக்குடி மாவட்ட  ஜூனியர் ஆக்கி அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு; கோவில்பட்டியில் 26-ந் தேதி நடக்கிறது

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனைவர் செ. குரு சித்ர சண்முக பாரதி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் ஆண்கள்  சாம்பியன் போட்டி  கோவில்பட்டியிலும் பெண்கள் சாம்பியன் போட்டி தேனியிலும் மார்ச்  முதல் வாரத்தில் நடக்க இருக்கின்றது   

அந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்  ஆக்கி அணி விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு பிப்ரவரி 26 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் காலை 6.30 மணி அளவில் பெண்களுக்கு ஆன தேர்வும் , மாலை  3.30 மணி அளவில் ஆண்களுக்கான தேர்வும் நடக்க இருக்கின்றது

இந்த மாவட்ட அணி தேர்வில் கலந்து கொள்பவர்கள்  1.1.2004 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும் கண்டிப்பாக  தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராகவும் அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் பயின்று வருபவராகவும் இருக்க வேண்டும் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் கொண்டு வர வேண்டும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 944 31 907 81

மேற்கண்டவாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *