கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களின்  பஸ் படிக்கட்டு பயணத்தை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை -முக்கிய முடிவு

 கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களின்  பஸ் படிக்கட்டு பயணத்தை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை -முக்கிய முடிவு

கோவில்பட்டி வட்டத்தில் பஸ்தொங்கியபடி கல்லூரி  படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இதுபற்றி பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. இந்த நிலையில் இன்று காலையில் இது பற்றி இன்றைய தினம் காலை www.tn96news.com  இணையதளத்தில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் பகலில்  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  அறிவுரைக்கிணங்க கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ,அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வீருகாத்தான்,  வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் , வட்டாட்சியர் தசுசிலா போக்குவரத்து பிரிவு உதவி காவல் ஆய்வாளர்

காவல் உதவி ஆய்வாளர்கள் (கிழக்கு மற்றும் மேற்கு)  மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இக்கூட்டத்தில் காவல்துறை சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படிக்கட்டிலோ அல்லது தொங்கிக்கொண்டோ பயணம்  செய்வதை அனுமதிக்க கூடாது என்று  ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு பஸ் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பஸ் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் இறங்க மறுத்தாலோ உள்ளே ஏறி வர மறுத்தாலோ காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வட்டார போக்குவரத்து அலுவலர் காலை மாலை வேளைகளில் காவல்துறை போக்குவரத்து துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கல்லூரியின் தன்னார்வலர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைத்து பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் எந்தெந்த கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதி தேவைப்படுகின்றனவோ அந்த கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ்கள்  இயக்க ஒப்புக்கொண்டனர்.  இது தொடர்பாக தினமும் கண்காணிக்கப்பட்டு வரும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *