கோவில்பட்டியில் சாலையின் இருபுறமும் பெருகிய ஆக்கிரமிப்புகள்: அகற்றக்கோரி கோட்டாட்சியரிடம் மனு
கோவில்பட்டி அணைத்து சமூக ஆர்வலர்கள், கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டது இருந்ததாவது:-
கோவில்பட்டி நெடுஞ்சாலை துறைக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது. இது பொதுமக்களுக்கு நடந்து செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மிகுந்த இடையூறாகவும் போக்குவரத்துக்கு மிகுந்த நெருக்கடியாகவும் உள்ளது,
இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, லட்சுமிமில் மேம்பாலம் முதல் ரெயில்நிலைய மேம்பாலம் வரை, புதுர்ரோடு, கடலையூர் ரோடு, மாதங்கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு, மந்திதோப்பு ரோடு, போன்ற சாலைகளில் 108 ஆம்புலன்ஸ் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கூட செல்லமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளது.
இந்த பகுதி முழுவதும் இருவழி சாலை என்பது மறைந்து ஒருவழி சாலையாக உள்ளது. நெடுஞ்சாலை துறை ஆக்கிமிப்புகளை அகற்றுவதற்கு முன்வராத காரணம் என்ன அரசியலா, பணமா என்று மக்கள் கேட்கும் நிலை உள்ளது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் பொதுமக்கள் நலன் கருதி உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் இல்லாத அளவிற்கு நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ள்ளது.
இந்த மனுவில் பி..ராமகிருஷ்ணன்.ராஜசேகரன், மகேந்திரன், மாரிமுத்து, சரமாரியப்பன் உள்பட 10 பேர் கையெழுத்து போட்டுள்ளனர்.