கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி கடையடைப்பு போராட்டம்
![கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி கடையடைப்பு போராட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2023/02/698db25c-4873-456d-a24b-7d11ed68687b-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.
மேலும் கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பல ரெயில்கள் தற்போது கடம்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து ரெயில்களையும் நின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது,.
அதன்படி இன்று , கடம்பூர் அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கடம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ மத்திய ரெயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அனைத்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/ef824983-d3b0-4174-9b8c-a938a879d5b5-1024x576.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)