கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பஸ் பயணம்

 கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பஸ் பயணம்

கோவில்பட்டி நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் வளர்ச்சிக்கு ஏற்ப வசதிகள் உயரவில்லை. கல்லூரிகள் அதிகரித்து விட்டன, அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய பஸ் வசதி இல்லாதது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஒவ்வொரு கல்லூரி நேரத்தையும் கணக்கிட்டு அரசு டவுண் பஸ்கள் இயக்கவேண்டும். ஆனால் அப்படி இயக்குவது இல்லை. தனியார் பஸ்கள் போட்டி போட்டு இயக்கப்படுகின்றன. அதில் இருக்கைகள் குறைவு. இதனால் அதில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிசெல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள்.

இளையரசனேந்தல் ரோடு, கிருஷ்ணா நகர் , அண்ணா பஸ். நிலையம் சாலை  மெயின்ரோடு போன்ற பகுதிகளில் தினமும் இக்காட்சிகளை காணமுடியும். சில சமயங்களில் மாணவிகளும் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்ய நேரிடுகிறது.

படிக்கட்டு பயணம் உயிருக்கு கேடு விளைவிக்கும் என்ற வாசகங்களை படித்தும் அதை கடைப்பிடிப்பது இல்லை. டிரைவர், கண்டக்டர் சொல்லியும் கேட்பதில்லை.

படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி கொண்டு செல்வதை போக்குவரத்து போலீசாறம் வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது. இந்த நிலையை மாற்றி கல்லூரி நேரங்களில் போக்குவரத்து போலீசார் முக்கியஇடங்களில் நின்று படிக்கட்டு ரோமியோக்களை பிடித்து அபராதம் விதித்தால் மறுபடியும் அந்த தவறை செய்யமாட்டார்கள்.

எனவே காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள்  கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *