Month: November 2022

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு: உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான சேவை, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, விமான சேவை பெருமளவு அதிகரித்து வருகின்றன.இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்துக்கு முன்பு 2018-ல் ஒரு நாளைக்கு சுமார் 8 […]

செய்திகள்

குரூப்-1 தேர்வு: அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் 19–ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இந்த […]

கோவில்பட்டி

இலுப்பையூரணி ஊராட்சியில் மானிய கடன்: ஆய்வு கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி -2 பிற துறைகளுடன் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் -சிறப்பு முகாம் நடைபெற்றது, ஊராட்சி தலைவர் செல்வி சந்தனம் தலைமை தாங்கினார்.மண்டல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட தொழில் மையம் நுண்ணாய்வாளர் ஞானபிரகாசம் , கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானிய […]

கோவில்பட்டி

பயிர்க்காப்பீட்டு நிலுவை தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பாலம் அருகில் இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பயிர்க்கப்பீட்டு நிலவை தொகையை உடனே வழங்க வேண்டும். அழிந்து போன மிளகாய், மக்காச்சோளம், பாசி பயிர், பருத்தி போன்ற அனைத்து பயிர்களுக்கும் காலதாமதம் இல்லாமல் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.தரமற்ற உரங்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். விவசாயிகள் ஒரு மூட்டை உரம் வாங்கினால் அதற்கு இணையாக ஒரு பொருள் வாங்க வேண்டும் என்ற […]

செய்திகள்

மருத்துவமனை லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் – அதிகாரிகள்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு .திட்டங்கள் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.இதற்காக மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழா நடந்த அரங்குக்கு செல்வதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் ஐ பயன்படுத்தினார்,.அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் லிப்டில் சென்றபோது திடீரென லிப்டில் கோளாறு ஏற்பட்டு இயக்கம் தடைபட்டது.இதனால் லிப்டில் சிக்கிகொண்ட அமைச்சர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர், சில நிமிடங்கள் லிப்டுக்குள் சிக்கி தவித்தனர், […]

தூத்துக்குடி

`டெஸ்ட் பர்ச்சேஸ்’- 6 மாதம் அவகாசம்: தூத்துக்குடி வணிகர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சம்பந்தமாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் டி சோலையப்பராஜா,செயலாளர் ஆர் மகேஸ்வரன், கூடுதல் செயலாளர் சுகன்யா எஸ்.செந்தில்குமார், பொருளாளர் ஏ.ஆர்.ஆனந்த பொன்ராஜ், மாநில துணை தலைவர் பி வெற்றிராஜன், தொகுதி செயலாளர் ஏ ஆனந்தராஜ், தூத்துக்குடி மத்திய மாவட்ட பகுதி சங்க பொறுப்பாளர்கள் […]

செய்திகள்

பழனி ஜவுளி கடை கொள்ளையில் திடீர் திருப்பம்; உரிமையாளர் பொய் புகார் அளித்தாரா?

பழனியில் திண்டுக்கல் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஜோதி கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் ஜோதி முருகன்.சம்பவத்தன்று இந்த கடையில் காவலாளியை தாக்கி ரூ.2 கோடி மதிப்பிலான ஜவுளிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக ஜோதி முருகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கோவையை சேர்ந்த மொத்த ஜவுளி வியாபாரி ஒருவரிடம் ரூ. 40 லட்சத்துக்கு ஜவுளிகள் கொள்முதல் செய்திருந்த ஜோதி முருகன், […]

செய்திகள்

கீழக்கரை கவுன்சிலர் உள்பட 2 பேர் கைதில் திடுக்கிடும் தகவல்; ரூ.300 கோடி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் பிடிபட்டனர்,அவர்கள் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரம் கடத்தி செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல […]

கோவில்பட்டி

பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 2 ஆண்டு ஜெயில்; கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை ஓம்சக்தி நகரை சோ்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி சாந்தி (வயது 36). இவா் கடந்த 2021 மே 10 -ம் தேதி தன்னிடம் இருந்த உடைந்த தங்க கம்மலை சரிசெய்ய, ஒரு நகைகடைக்கு சென்றார்,கம்மலை இப்போது சரி செய்ய முடியாது, இன்னும் 2 மணி நேரம் ஆகும் என கூறிநார். இதனால் சாந்தி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கடையிலிருந்த நபா், தனது அண்ணனின் கடையில் நகையை சரிசெய்து தருவதாக கூறி இருக்கிறார்இதை நம்பிய […]

சினிமா

அதிர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சுருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியுடன் நடித்துள்ள வால்டர் வீரய்யா பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.நடிகை சுருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமர்புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.“பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், பைனல் கட் ஆக […]