• May 9, 2024

Month: September 2022

சினிமா

3௦-ந்தேதி ரிலீஸ்: `பொன்னியின் செல்வன்’ கதை-கதாபாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படமாக்க வேண்டும் என்ற தமிழக ரசிகர்களின் நீண்ட நாள் கனவை மணிரத்னம் பெரிய நட்சத்திர பட்டாளம், காடு மலைகளில் படப்பிடிப்பு, அதிக பொருட் செலவு போன்ற பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றி இருக்கிறார்.நாளை 3௦-ந்தேதி ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதையானது திருப்பங்கள், சதி, துரோகங்கள், சாகசங்கள் என்று பல விறுவிறுப்பு சம்பவங்கள் நிறைந்தது. அதை படித்தவர்கள் கதை நடந்த காலத்துக்கே சென்றது போன்ற உணர்வை பெற்றனர். பொன்னியின் செல்வன் […]

கோவில்பட்டி

பசுமை தமிழ்நாடு திட்டத்தை விளாத்திகுளம் தொகுதி தான் முதலில் நிறைவேற்றும்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உறுதி

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அதன் ஒருபகுதியாக விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளிலும், 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. விளாத்திகுளத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய் கரையோரம் 700 மரக்கன்றுகள் நடும் […]

செய்திகள்

ஓசியில் வரமாட்டேன்… அரசு டவுண் பஸ்சில் வலுக்கட்டாயமாக டிக்கெட் வாங்கிய மூதாட்டி-வைரலாகும் வீடியோ

தமிழக அரசு பெண்களுக்கு அரசு டவுண் பஸ்களில் இலவச பயணத்தை அறிவித்து இருக்கிறது. டிக்கெட் வாங்காமல் இலவசாமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.இந்த நிலையில் கோவை மதுக்கரையில் அரசு டவுண் பஸ்சில் ஒரு மூதாட்டி ஒருவர் ஓசியில் நான் வரமாட்டேன், எனக்கு டிக்கெட் கொடு என்று கேட்டு நடத்துனரிடம் வாக்குவாதம் செய்கிறார்.ஆனால் அந்த கண்டக்டர் டிக்கெட் வைத்துகொண்டு பணம் வேண்டாம் […]

செய்திகள்

ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டை நாடியது ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். கமிட்டியை சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.இந்த நிலையில் காவல் துறையினர் 50 இடங்களிலும் பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடந்தவர் ரெயிலில் அடிபட்டு பலி

கோவில்பட்டி, முத்து மாரியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர், இலுப்பையூரணி அருகில் ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தன்னுடைய வீட்டில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.வேலாயுதபுரம் அருகில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியே வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் பேட்டரி கார், நகரும் படிக்கட்டு, 2-வது பிளாட்பாரத்தில் முழுமையான நிழற்கூரை

கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜகோபால். செயலாளர் மூர்த்தி, ஆகியோர் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறார்கள். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி ரெயில்நிலையம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கியமான ரெயில்நிலையம் ஆகும். மதுரை கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்து அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் ரெயில்நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது. தற்போது 2-வது இருப்புப்பாதை அமைத்த பின்னர் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று […]

செய்திகள்

மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் வரவேற்பு

மதுரை மாநகருக்கு இன்று வருகை புரிந்த அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மதுரை-தூத்துக்குடி பைபாஸ் ரோடு டோல்கேட் அருகில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆள் உயர் மாலை அணிவித்து மலர் கிரீடம் சூட்டப்பட்டது. இதில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.மோகன் , விளாத்திக்குளம் […]

தூத்துக்குடி

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி மற்றம் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், மந்திர மூர்த்தி, ஜெயலட்சுமி, பத்மாவதி ஜெயராணி ஆகிய 5பேரும் எழுந்து “ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக் கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நிதி நிறுவனம் முற்றுகை; பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் புகார்

கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் அமுதசுரபி என்ற நிதி நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களாக வாடிக்கையாளர்கள் சேமித்து வைத்த பணத்தினை தரமால் ஏமாற்றி வருவதாக கூறி நேற்று இரவில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தினை முற்றுகையிட்டனர். அவர்கள் அந்த அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு போலீசார் விரைந்து சென்று இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை […]

செய்திகள்

`நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம்’- பழமொழி மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றறது.அ.தி.மு.க,சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-.கேள்வி :- அ.தி.மு.க. அலுவலகத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஜ.டி. தெரிவித்துள்ளதே பதில் :- இது உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசியாக இருக்கின்ற ஜே.சி.டி.பிரபாகர் அனைத்து […]