• May 20, 2024

`நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம்’- பழமொழி மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த டி.ஜெயக்குமார்

 `நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம்’- பழமொழி மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த டி.ஜெயக்குமார்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றறது.
அ.தி.மு.க,சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
.கேள்வி :- அ.தி.மு.க. அலுவலகத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஜ.டி. தெரிவித்துள்ளதே

பதில் :- இது உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசியாக இருக்கின்ற ஜே.சி.டி.பிரபாகர் அனைத்து ஆவணங்களும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில்தான் உள்ளது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் காவல்துறை யார் வீட்டிற்குச் சென்றிருக்கவேண்டும். ஆவணங்களைக் கொள்ளையடித்துவிட்டு,சொத்தை சூறையாடி இவை அனைத்தும் தொலைக்காட்சியில் வந்தபிறகும் இதுதொடர்பாக ஒப்புதல் வாக்குமூலத்தை ஜே.சி.டி. பிரபாகர் அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்குக் காவல் துறை ஏன் செல்லவில்லை. அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வமும்,காவல்துறையும் கைகோர்த்துள்ளார்கள். டம்மி பீஸ் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை கணக்கு காண்பிக்கவேண்டும் என்பதற்காக அவர் வீட்டிலிருந்து எடுத்ததுபோல காண்பிக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ஜே.சி.டி. பிரபாகர் கூறியதை வைத்து ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்குப் போகவேண்டியதுதானே.ஏன் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்குப் போகப் பயப்படுகிறார்கள். இதன் மூலம் தி.மு.க.வும்,ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்துவிட்டார்கள் என்றுதான் இதன் மூலம் தெரியவருகிறது.

கேள்வி :-பண்ருட்டி ராமச்சந்திரனை அமைப்புச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளாரே

பதில்:- நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் என்று பழமொழி சொல்வார்கள்.அதுபோல அவர் கட்சியில் இல்லை.அடிப்படை உறுப்பினரே கிடையாது.அவரை அமைப்பு செயலாளராக நியமிக்கிறார் என்றால் அதற்கு இந்த பழமொழியைத்தான் சொல்ல முடியும்
.
கேள்வி :- அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதே

பதில் : -தி.மு.க. அரசைப் பொறுத்தவரையில் சமூக நீதி என்று பேசுவார்கள்.திராவிட மாடல் என்று பேசுவார்கள். அவர்கள் கட்சியில் தேர்தல் நடந்தது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு பொதுக்குழு உறுப்பினர்,ஒரு செயற்குழு உறுப்பினர். 700 பேருக்கு மேல் வந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் எத்தனை பேர் பழக்குடியினர் இருக்கிறார்கள். எத்தனைபேர் ஆதி திராவிடர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு வேலூரை எடுத்துக்கொண்டால் அங்கு அதிகமாக ஆதிதிராவிடர்,பழங்குடியினர் இருக்கிறார்கள். இதில் ஒரே ஒருவர்தான் பொதுக்குழு உறுப்பினராக வந்துள்ளார். சமூக நீதி வாய் கிழியப் பேசும் தி.மு.க. இந்த பட்டியலை வெளியிடட்டும். திராவிட மாடல் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் நாங்கள் ஆதிதிராவிடர்களுக்கு இத்தனை அளித்துள்ளோம்.பிற்படுத்தப்பட்டோருக்கு இவ்வளவு அளித்துள்ளோம்  என்று சொல்லுங்கள் பார்ப்போம். உங்களால் சொல்ல முடியாது. அப்படி என்றால் ஜாதி ஆதிக்கம் அதிகமாக மேலோங்கியுள்ளது தி.மு.க.வில்தானே? ஊருக்குத்தான் உபதேசம்.
ஆனால் எங்கள் கட்சியில் புரட்சித்தலைவரும் சரி,புரட்சித்தலைவியும் சரி ஆதிதிராவிடர்களை ஒரு பொதுத்தொகுதியில் நிற்கவைத்து வெற்றிபெறச் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா. பெண்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளித்து அழகு பார்த்தார். அதுபோல ஆதிதிராவிடர், பழங்குடியினர் என் அனைவருக்கும் பிரதிநித்துவம் இருக்கிறது. திராவிட மாடல்,சமூக நீதி என்று பேசி இன்றைக்கு எங்களுக்கு இல்லாதது எல்லோருக்கும் என்றால் எப்படி.சமூக நீதி,திராவிட மாடல் என்றால் இந்த விடியா அரசு என்ன செய்திருக்கவேண்டும் தலைவர்களுடைய சிலைகளுக்கு எல்லாவிதமான பாதுகாப்பும் செய்யவேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதி ஆட்சியிலே தலைவர்களின் சிலைகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலையும் காட்டுகின்ற ஒரு இரட்டை வேடதாரிகள் என்றால் அது தி.மு.க.தான்.பச்சோந்தி என்று சொல்வார்கள். மாற்றிக்கொள்வதில் வல்லமை படைத்தவர்கள்தான் தி.மு.க.வினர்..

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *