• May 20, 2024

ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டை நாடியது ஆர்.எஸ்.எஸ்.

 ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டை நாடியது ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். கமிட்டியை சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் காவல் துறையினர் 50 இடங்களிலும் பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த சூழலில் ஆர்.எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கினால், அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். என்பதற்காக காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீண்டும் ஐகோர்ட்டை நாடியுள்ளது. ஒருவேளை காவல் துறை அனுமதி மறுத்துள்ள காரணம் வலுவாக இருக்கும் பட்சத்தில், பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *