Month: August 2022

கோவில்பட்டி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது- ஏ.எம்.விக்கிரம ராஜா

கோவில்பட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல தலைவர் எம்.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் வெங்கடேஷ்வரன், வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் மற்றும் […]

தூத்துக்குடி

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் முருகன் என்ற ஸ்டீபன் (வயது 40). இவரை புதுக்கோட்டை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.இதே போன்று தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த மதியழகன் மகன் முத்துசெல்வம் (22), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மதன்ராஜ் (21), தூத்துக்குடி ஸ்டேட் வஙகி காலனியை சேர்ந்த தங்கமாரி மகன் லட்சுமணன் (20) ஆகியோரை வடபாகம் போலீசார் கூட்டு கொள்ளை முயற்சி வழக்கில் கைது […]

கோவில்பட்டி

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பிடுதல் கள அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பிடுதல் கள அதிகாரி பணிகளுக்கு, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் உள்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.விண்ணப்பிப்பவர்கள் மத்திய, மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் நிலுவையில் இருக்கக்கூடாது. தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.பாலிசியின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி ரெயில்நிலையத்தில் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரசார் வரவேற்பு

ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை தொடர்பான தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொள்வதற்காக இன்று காலை ரெயில் மூலம் தூத்துக்குடி தந்தார்.விமான நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன் ஆகியோர் தலைமையில், கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கே.எஸ்.அழகிரி பேசுகையில் கூறியதாவது:-இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்; கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 துணை வட்டாட்சியர்கள் நிர்வாக வசதிக்கா பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்கள் விவரம் வருமாறு:-*தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி- ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் *சாத்தான்குளம் கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுமதி-ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் *தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு தலைமை உதவியாளர் ஜானகி- ஏரல் மண்டல துணை வட்டாட்சியர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.3.06 கோடி

தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார். தொடர்ந்து, மாநகராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசு புழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்; 2 நாட்கள்

கோவில்பட்டி தாசில்தார் செ.சுசிலா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில், வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையிலும், வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.இப்பணி இம்மாதம் 1-ந்தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் வீடுகளுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையொட்டி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நாளையும் […]

தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்தது.6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி […]

செய்திகள்

காங்கிரஸ் நிலைகுலைவது கவலையாக உள்ளது- உமர் அப்துல்லா

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு குறையவில்லை. சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான […]

செய்திகள்

காங்கிரசில் இருந்து குலாம்நபி ஆசாத் விலகினார் ; ராகுல்காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி என்ற முறையிலும், தனது சொந்த மண்ணில் கட்சியை தொடங்க விரும்புவதாக அவர் கூறி இருக்கிறார்.“நான் ஜம்மு […]