காங்கிரஸ் நிலைகுலைவது கவலையாக உள்ளது- உமர் அப்துல்லா
![காங்கிரஸ் நிலைகுலைவது கவலையாக உள்ளது- உமர் அப்துல்லா](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-1-9.jpg)
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு குறையவில்லை. சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான கட்சி (காங்கிரஸ்) நிலைகுலைவதை பார்ப்பதற்கு கவலையாகவும், பயமாகவும் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)