தூத்துக்குடி நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.3.06 கோடி

 தூத்துக்குடி நகரில் காற்றின் தரத்தை  மேம்படுத்த ரூ.3.06 கோடி

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்

தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து, மாநகராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசு புழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குதல், மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய ஜே.சி.பி. எந்திரம் வாங்குதல், மேற்கு மண்டலம் வி.வி.டி. சிக்னல் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் நீரூற்று அமைத்து பசுமை புல்தரைகளுடன் அழகுபடுத்தும் பணி செய்தல்,

தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2021-22-ம் ஆண்டு மானிய தொகை ரூ.3.06 கோடி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி தூத்துக்குடி நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகர பகுதியில் விபத்து ஏற்படும் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து இரண்டு மடங்கு அபராதம் விதித்தல், மாநகராட்சி 60 வார்டுபகுதிகளில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்கள், 21 அலுவலக கட்டிடங்கள், 30 நீரேற்று நிலையங்கள், 60 பூங்காக்கள், 20 மாநகராட்சி பள்ளிகள், 8 அம்மா உணவகங்கள் உட்பட கட்டிடங்களில் மின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *