கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்; 2 நாட்கள் நடக்கிறது
![கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்; 2 நாட்கள் நடக்கிறது](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-4-1.jpg)
கோவில்பட்டி தாசில்தார் செ.சுசிலா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில், வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையிலும், வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.
இப்பணி இம்மாதம் 1-ந்தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் வீடுகளுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) கோவில்பட்டி தாலுகாவில் வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்களால் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்களின் மூலம் இணையவழியில் படிவம் 6பி உள்ளீடு செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலமும் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)