தூத்துக்குடி ரெயில்நிலையத்தில் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரசார் வரவேற்பு

 தூத்துக்குடி ரெயில்நிலையத்தில் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரசார் வரவேற்பு

ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை தொடர்பான தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொள்வதற்காக இன்று காலை ரெயில் மூலம் தூத்துக்குடி தந்தார்.விமான நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன் ஆகியோர் தலைமையில், கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கே.எஸ்.அழகிரி பேசுகையில் கூறியதாவது:-
இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பொழுது நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது.
அமெரிக்கர் டாலரின் இந்திய மதிப்பு இப்போது 80 ரூபாய் வரை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம், தவறான பொருளாதார கொள்கை தான்,

விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் வருவதாக, மோடி சொன்னார் அதுவும் நடக்கவில்லை, இது அரசாங்கத்தின் தவறு, வீழ்ச்சி இதை மக்களிடம் எடுத்து கொண்டு சொல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *