அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பிடுதல் கள அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
![அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பிடுதல் கள அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-1-10.jpg)
கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பிடுதல் கள அதிகாரி பணிகளுக்கு, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் உள்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விண்ணப்பிப்பவர்கள் மத்திய, மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் நிலுவையில் இருக்கக்கூடாது. தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பாலிசியின் பிரிமீயம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் கள அதிகாரி ரூ.5 ஆயிரம் காப்பீடு தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். தங்களது ஏஜென்சி காலம் முடிக்கப்படும் போது காப்பீட்டுத் தொகையாக செலுத்தப்பட்ட பணம் தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெறலாம். விண்ணப்பங்களை, தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 12-ந் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)