ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

 ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் முருகன் என்ற ஸ்டீபன் (வயது 40). இவரை புதுக்கோட்டை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
இதே போன்று தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த மதியழகன் மகன் முத்துசெல்வம் (22), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மதன்ராஜ் (21), தூத்துக்குடி ஸ்டேட் வஙகி காலனியை சேர்ந்த தங்கமாரி மகன் லட்சுமணன் (20) ஆகியோரை வடபாகம் போலீசார் கூட்டு கொள்ளை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல் தனசாமி மகன் தீபக் தயாளன் (44) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், முருகன் என்ற ஸ்டீபன், முத்துசெல்வம், மதன்ராஜ், லட்சுமணன், தீபக் தயாளன் ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 179 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *