தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது- ஏ.எம்.விக்கிரம ராஜா

 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது- ஏ.எம்.விக்கிரம ராஜா

கோவில்பட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல தலைவர் எம்.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் வெங்கடேஷ்வரன், வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்க தலைவர் கார்த்திஸ்வரன், லாலா மிட்டாய் கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம், காளியப்பன், முத்துராஜா, மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர
கூட்டம் முடிந்ததும் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்பு முறையாக பிளாட்பாரம் அமைக்கவில்லை. ஓடை அப்படியே விட்டு இருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை தூர்வாரி, சிமெண்டு கான்கிரீட் தளம், தடுப்பு சுவர் கட்டி, பொது மக்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
கோவில்பட்டி புதுரோட்டில் குண்டும் குழியுமாக இருக்கிறது, ரோடு போடும் பணியை தொடங்கி, சாலையின் இரு புறமும் மின் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும்.
இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கவழிப் பாதையில் மழை நேரங்களில் கழிவு நீரும், மழை நீரும் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்கும் வகையில் ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.
மாதாங்கோவில் சந்திப்பில் உள்ள குறுகிய பாலத்தை விரிவாக்கம் செய்து, ரோடு பணியை முடிக்க வேண்டும்.
சாதாரணமாக மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய அரிசி, தயிர், பால் போன்ற பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படுகிறது. அதை ரத்து செய்ய கோரி இருக்கிறோம். அது போல் மாநில அரசு கொண்டுவந்துள்ள செஸ் வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அடுத்த ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் மதுரையில் நடைபெற இருப்பதாக தெரிகிறது. அன்றைய தினம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் அல்லது வேறு வகை போராட்டம் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் யாரும் விற்பனை செய்யக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கலப்பட பொருட்களை விற்க கூடாது. இதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம்.
அதுபோல் தமிழ்நாட்டில் கஞ்சா அதிக அளவில் ஊடுருவிக்கொண்டு இருக்கிறது. அதுவும் நிறுத்தப்பட வேண்டும்.அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளின் வாடகை கட்டணத்தை சீரமைக்க வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் மக்கள் பிரச்சினையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *