Month: August 2022

தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் குவிந்த மக்கள்

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ம்தேதி வரை திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிந்தபிறகும் ஆலயத்துக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு ஆயிரக்கனக்கானர்கள் கோவில் வளாகத்தில் கூடினார்கள். சிறுவர்களை கவரக்கூடிய வகையில் விளையாட்டு பொருட்கள் விற்கப்பட்டன, பொருட்காட்சியும் நடந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் சாக்கடை சீரமைப்பு பணி; மக்கள் கடும்

கோவில்பட்டி நகரின் மிக முக்கிய பகுதியாக புது ரோடு விளங்குகிறது. இந்த ரோட்டின் இருபுறமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கனரக வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கும். அதே போல் ஆக்கிரமிப்பும் அதிகமாக உண்டு.தூத்துக்குடி துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் செல்வதற்கு இதுதான் வழி. ஆனால் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இந்த நிலையில் சாலையின் நடுவே 2 ஆண்டுகளுக்கு முன்பு […]

கோவில்பட்டி

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் கொள்கை; அமைச்சர்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சிப்பாசறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நடைபெற்ற இந்த பாசறை கூட்டத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.தி.மு.க.செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி.லெனின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கோவிலப்ட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ,மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கூறியதாவது:- தோளில் துண்டு போட முடியாத நிலை, ஆலயத்திற்குள் அனுமதி கிடையாது, […]

கோவில்பட்டி

கல்லூரி பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு கணிதத் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சிவசங்கரன் (வயது 46).அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர், மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிவசங்கரன், அந்த மாணவரை அழைத்து அறிவுரை கூறினாராம்.இந்த நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது அலுவலக அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 2 பேர் அவரது அறைக்குள் […]

கோவில்பட்டி

சர்க்கரை நோயாளிகள் காசநோய் பரிசோதனை செய்வது அவசியம்- சுகாதார பணிகள்துணை இயக்குநர்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சுகாதார பணிகள் (காசம்) துணை இயக்குநர் டாக்டர் சுந்தர லிங்கம் ,காசநோயால் பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள் பற்றி பேசினார்.அவர் பேசுகையில் காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் […]

கோவில்பட்டி

மாணவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦ வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்; கீதாஜீவன் தகவல்

கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான ஈ.வெ.அ.வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.கட்டிடத்தை விழாவில் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-எனது தந்தை அடிக்கல் நாட்டிய பள்ளிக்கூட அறைகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபுறம் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே என்பது வருத்தம் அளிக்கிறது. 2௦11-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 11 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்பதை நினைத்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 295 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு 16 ஆயிரம் […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் […]

ஆன்மிகம்

ஆகஸ்டு 5 – வீடுகளில் வரலட்சுமி விரத பூஜை

ஆகஸ்டு 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பவுர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக்கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம்.வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். வரலட்சுமி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-பள்ளியில் பயிலும் அனைவரும் குழந்தைகளே,கல்வி கற்க வேண்டிய வயதில் கல்வியையும்,ஒழுக்கத்தையும் மட்டுமே கற்றுக் கொண்டு சாதனையாளர்களாக உருவாக வேண்டும்.செல்போனில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றக்கூடாது, செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்இவ்வாறு பேசினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா அனைவரையும் […]