சர்க்கரை நோயாளிகள் காசநோய் பரிசோதனை செய்வது அவசியம்- சுகாதார பணிகள்துணை இயக்குநர்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சுகாதார பணிகள் (காசம்) துணை இயக்குநர் டாக்டர் சுந்தர லிங்கம் ,காசநோயால் பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள் பற்றி பேசினார்.
அவர் பேசுகையில் காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் காசநோய் பரிசோதனை செய்வது மிக அவசியம் என்று அறிவுறுத்தினார்.
சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர்வேல் , அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், காஜா நதிமுதின், சரவணன் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார பார்வையாளர் மகேஷ் மற்றும் ஆய்வுகூட நுட்புனர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் செய்திருந்தார்.