• May 17, 2024

மாணவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦ வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்; கீதாஜீவன் தகவல்

 மாணவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦ வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்; கீதாஜீவன் தகவல்

கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான ஈ.வெ.அ.வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.
கட்டிடத்தை விழாவில் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
எனது தந்தை அடிக்கல் நாட்டிய பள்ளிக்கூட அறைகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபுறம் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே என்பது வருத்தம் அளிக்கிறது.


2௦11-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 11 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்பதை நினைத்து பார்க்கமுடிகிறது. எல்லா தரப்பில் இருந்தும் உதவிகள் பெற்று எழில்மிகு பள்ளிக்கட்டிடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
நமது முதல் அமைச்சர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பெரும் அக்கறை எடுத்து வருகிறார். மற்ற துறைகளை விட கல்வி துறைக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது, யாரும் பள்ளிக்கு செல்லாமல் விடுபடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எனவே பள்ளிக்கு போகாமல் வேலைக்கு செல்வோர் யாரும் இருந்தால் அவர்களை இந்த பள்ளியில் கொண்டுவந்து சேருங்கள்.
12-ம் வகுப்புக்கு பிறகு கல்லூரி படிப்பிலும் உயர்கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும். எல்லோரும் உயர்கல்வி படிக்கவேண்டும், இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி படிக்கவேண்டும் என்பதற்காக 6-,ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1௦௦௦ உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
மேலும் சந்துணவுடன் சேர்த்து காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது,முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் தொடங்கப்படும்/. பின்னர் சத்துணவு வழங்கும் அத்தனை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கபடும்.
ஆசிரியர் பணி என்பது அறப்பணி. அவர்களது பணியை வேறு யாரும் செய்யமுடியாது. ஒரு ஆசிரியர் விடுமுறையில் சென்றால் மறுபடியும் அவர் வந்து தான் விடுபட்ட பாடத்தை நடத்த வேண்டும். எனவே மாணவர்கள் வளர்ச்சியில் ஆசிரியருக்கு பெரும் பங்கு இருக்கிறது. தினமும் ,மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல் ஒழுக்க கல்வி கற்று தரவேண்டும். இதன் ,மூலம் மாணவர்களின் அறிவாற்றல் பெருகிட செய்யவேண்டும். திறனாய்வு தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த பள்ளியில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் பேசினார்,
விழாவுக்கு வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் வேல்முருகேசன் நாடார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மெர்க்கண்டைல் வங்கி தலைமை அலுவலக பொது மேலாளர் இன்பமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின்போது வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடை அளித்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *