• April 30, 2024

Month: July 2022

சிறுகதை

நலம் விரும்பி …சிறுகதை

பிரபலமான நகைக்கடை… நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்…அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் நகை கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பனி அதிகமாக இருந்ததால் காவலாளி தலையில் பனிக்குல்லா மாட்டியபடி நகைகடை கட்டிடத்தை சுற்றி வந்தார்.பனிரெண்டு மணி ஆனதும் காவலாளி மீண்டும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் சேரில்வந்து அமர்ந்தார்.கண்களை தூக்கம் தழுவியது.அதிகாலை 5 மணிக்கு விழித்தவர் எழுந்து கடையை சுற்றிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. கடையின் பின்புறம் கட்டிடத்தில் ஓட்டை போடப்பட்டிருந்து. செங்கல் […]

கோவில்பட்டி

17 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை கண்டுபிடித்து 15 ஏக்கர் தொகுப்பு தேர்வு

கோவில்பட்டி வட்டாரத்தில் 17 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளான பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து, உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தரிசு நிலங்களை கண்டறிந்து 15 ஏக்கர் தொகுப்பு அமைத்து ஆழ்துளை கிணறு அமைத்தல், இடுபொருள் வழங்குதல், விவசாய குழு அமைத்து அமைத்தல் போன்ற பயன்கள், அரசு உதவியுடன் கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டப்பணி செயல்பாடு குறித்து கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள சின்னமலை குன்று, கடலையூர், குலசேகரபுரம், பாண்டவர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி `கோணல்’ பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சாய்ந்த லாரி; போக்குவரத்து கடும்

கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு, மெயின் ரோடு சந்திப்பில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் தடுப்பு சுவர் நேராக இல்லாமல் கோணலாக காட்சி அளித்தது.பாலத்தின் எதிர்புறமும் இதே போல் கோணலாக தான் பாலம் உள்ளது. ஓடை ஆக்கிரமிப்பினால் மக்கள் அனுபவித்து வந்த துன்பத்தை , இப்போது இந்த கோணல் பாலத்தை கடந்து செல்ல அதே துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்துக்கு சாம்பல் பாரம் ஏற்றி […]

தூத்துக்குடி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திரதின கொண்டாட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் ஆலோசனை

.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் கலெக்டர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள்

கோவில்பட்டியில் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான், மின்தடை பற்றி கூறி இருப்பதாவது:- பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு, பைபாஸ் […]

கோவில்பட்டி

கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிப்பேன்; கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.வெங்கடேஷ் உறுதி

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக(டி.எஸ்.பி.) இருந்த உதயசூரியன் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார். 3 மாதமாக மாற்று டி,எஸ்.பி. நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி.யாக கி. வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு இன்று பதவி ஏற்றார்.இவர் கரூர் மாவட்டம் அரவங்குறிச்சி தாலுகா பொன்னா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. (மெக்கானிக்கல் துறை) படித்து முடித்துவிட்டு, 2 தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் அரசு தேர்வு மூலம் வணிக வரித் துறையில் உதவியாளராகவும், கூட்டுறவு துறையில் சீனியர் […]

சிறுகதை

முன்னாள் மாணவரின் பஸ் பயணம் …(சிறுகதை)

அந்த கிராமத்தில் அந்த ஒரு பள்ளிக்கூடம் தான் உண்டு. அது அரசு பள்ளிக்கூடம்….5 ம்வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிப்பார்கள். ஆறாம் வகுப்புக்கு மேல் நகர பகுதிக்கு சென்று படிக்க வேண்டும்.அன்று விடுமுறை நாள். பள்ளி பூட்டிகிடந்தது. மாலை வேளை சோ என்று மழை கொட்டியது. பள்ளி அருகே ஒதுங்கினான் முனியன். காற்று பலமாக வீசியது. பள்ளிக்கு வெளியே ஒதுங்கியவன் மீது சாரல் அடித்தது. மழைவிடுவதாக தெரியவில்லை. பள்ளியின் உள்ளே போய்விடவேண்டியதுதான் என்று நினைத்தான். பூட்டை இழுத்து […]

செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு வந்தபடி உள்ளனர்.நேற்று பலத்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் இரவு 7 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அருவியில் இருபகுதிகளில் குளித்துக் கொண்டு இருந்த […]

கோவில்பட்டி

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்- வழிபாடு

முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் என பித்ரு பூஜை அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசை சிறப்பானதாகும். மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய முடியாதவர்கள், கண்டிப்பாக இந்த மூன்று அமாவாசை தினங்களிலாவது பித்ரு பூஜை செய்து வழிபடுவது அவசியம்.இந்தாண்டு ஆடி அமாவாசை திதியானது புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் இன்றைய தினம் திதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு அமர்ந்து தர்ணா

கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது மேஜை முன்பு ஐந்தாவது தூண் தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மனுதாரர்களின் சந்திப்பை தவிர்க்க வேண்டி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்காமல் பிற அலுவலர் அறையில் அமர்ந்து மனுதாரர் சந்திப்பை தவிர்த்து வருவதாக புகார் கூறி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தனர்,