• May 16, 2024

17 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை கண்டுபிடித்து 15 ஏக்கர் தொகுப்பு தேர்வு

 17  பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை கண்டுபிடித்து 15 ஏக்கர் தொகுப்பு தேர்வு

கோவில்பட்டி வட்டாரத்தில் 17 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளான பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து, உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தரிசு நிலங்களை கண்டறிந்து 15 ஏக்கர் தொகுப்பு அமைத்து ஆழ்துளை கிணறு அமைத்தல், இடுபொருள் வழங்குதல், விவசாய குழு அமைத்து அமைத்தல் போன்ற பயன்கள், அரசு உதவியுடன் கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டப்பணி செயல்பாடு குறித்து கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள சின்னமலை குன்று, கடலையூர், குலசேகரபுரம், பாண்டவர் மங்கலம், பிச்சை தலைவன் பட்டி, ஜமீன் தேவர்குளம், சத்திரப்பட்டி, துறையூர், இளம்புவனம், தீத்தாம் பட்டி, மூப்பன்பட்டி, வடக்குப்பட்டி, சித்திரம்பட்டி, கொடுக்காம்பாறை, சிதம்பராபுரம், சிந்தலக்கரை, வெங்கடேஸ்வரபுரம் போன்ற பஞ்சாயத்துகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் ஆய்வு நடத்தினார்.
சின்னமலை குன்று, கடலையூர் மற்றும் குலசேகர புரம் பகுதிகளில் உள்ள தரிசு நிலப்பகுதியை பார்வையிட்டு 15 ஏக்கர் தொகுப்பு தேர்வு செய்யும் பணி ஆய்வு செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ், உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், துணை வேளாண்மை அலுவலர் தாணுமாலையான், தோட்டக்கலை அலுவலர் சுவேகா, வேளாண்மை அலுவலர் காயத்ரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *