• May 16, 2024

Month: July 2022

கோவில்பட்டி

சுபாநகர் கோவிலில் ரூ.2 லட்சம் ஐம்பொன் சாமி சிலை திருட்டு

கோவில்பட்டி சுபா நகரில் ஸ்ரீ நித்யகல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைக்கு பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து அர்ச்சகர் வரதராஜ அய்யங்கார் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் , கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறி அடித்துக்கொண்டு உள்ளே போய் பார்த்தார். சுவாமி சன்னதியில் இருந்த ஐம்பொன் சாமி சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி […]

கோவில்பட்டி

லட்சுமி மில்-இளையரசனேந்தல் ரோடு சுரங்கபாலம் வரை ரெயில்வே பாதைக்கு இணையாக சர்வீஸ் ரோடு;

கோவில்பட்டி லட்சுமி மில்-இளையரசனேந்தல் ரோடு சுரங்கபாலம் வரை ரெயில்வே பாதைக்கு இணையாக சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இது தொடர்பாக இனாம் மணியாச்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், இந்திராநகர், சீனிவாச நகர், அத்தைகொண்டான், செண்பகவல்லி நகர், திலகர் நகர், காந்திநகர் பகுதியினர் இன்று கோட்டாட்சியரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி பஞ்சாயத்துக்கு யூனியனுக்கு உட்பட்ட இனாம் மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர், சீனிவாசநகர், அத்தகொண்டான், […]

கோவில்பட்டி

எம்.சாண்ட் க்கு விலை நிர்ணயம் கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-*சமீபகாலமாக உயர்த்தபட்ட எம்.சாண்ட் விலைஉயர்வை வாபஸ் பெறவேண்டும்.*எம்.சாண்ட் விலைநிர்ணயம் செய்யவேண்டும்.*எம்.சாண்ட் விலையை திடீரென உயர்த்திய தனியார் மணல் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.*.எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டிடம் கட்டுவோர், கட்டிட தொழிலாளர்கள், எம்.சாண்ட்லாரி உரிமையாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும்,.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி,பாபு […]

சினிமா

60 வயது நடிகருடன் திருமணமா ? பிரபல நடிகை மறுப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை பவித்ரா. 43 வயதான பவித்ரா இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.ஏற்கனவே சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்த பவித்ரா கடந்த 6 ஆண்டுகளாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழம்பெரும் தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மாற்றாந்தாய் மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் ஒன்றுவிட்ட சகோதரருமான நரேஷ் பாபு (வயது6௦) வை பவித்ரா திருமணம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதிக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நடராஜபுரம் 1 முதல் 9 வரையுள்ள தெருக்களுக்கும், படர்ந்த புளி, கங்கன் குளம், ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், சிட்கோ உபமின் […]

ஆன்மிகம்

இறைவனின் அருளைப் பெற விடாமல் தடுக்கும் மனிதனின் 6 குணங்கள்

அரிஷத்வர்கம் எனச் சொல்லப்படும் மனிதனின் ஆறு குணங்களும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும். ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும். பக்தி நிலையைப் பொறுத்தவரை கீழ்க்காணும் இந்த 6 குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ எனச் சொல்லப்படுகின்றது. காமம் – தீவிர ஆசை குரோதம் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றும் நடவடிக்கை

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது.இந்த கோவிலில் தமிழ் மாதங்களான ஆடி, புரட்டாசி தவிர மற்ற 10 மாதங்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இது தவிர வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, மாசித் திருவிழா என நான்கு முக்கிய திருவிழாக்களும் நடக்கிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் […]

ஆன்மிகம்

கோவில்களில் இத்தனை சக்தியா…? ஆச்சரியம் அளிக்கும் அறிவியல் தகவல்கள்

நம் முன்னோர்கள் பின்பற்றும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் அவர்கள் எப்படி கண்டுபிடித்தனர் என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வாறு, நாம் தெரியாமலேயே பின்பற்றி கொண்டிருக்கும் சில செயல்களில் இருக்கும் அறிவியல் உண்மையை தெரிந்துகொள்வோம். பொதுவாக நாம் அனைவரும் கோவில்களுக்கு இறைவனை வழிபடுவதற்கு தான் செல்வோம். ஆனால், அதையும் மீறி பல விஷயங்கள் கோவில்களில் இருக்கிறது. முதலில், கோவில்கள் எதற்காக கட்டப்படுகிறது? என்பதை தெரிந்துகொள்வோம். முன் காலத்திலிருந்தே, மின்காந்த சக்தி இருக்கும் இடங்களில் தான் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆயிரத்தெண் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி கதிரேசன் சாலையில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது,முதல் இரண்டு நாட்கள் விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து பலவேறு பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வேள்வி பூஜை. கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. மூன்றாம் நாள் காலை 5 மணிக்கு மேல் பல்வேறு பூஜைகள் நடைபெற்று காலை 8.15 மணிக்கு கும்ப பிரயாணம் தொடங்கியது.8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தொடங்கி காலை 9.3௦ மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் […]

கோவில்பட்டி

தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறவேண்டும்; கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கோவில்பட்டி அமைப்பு கூட்டம் மற்றும் கலைஞர்களுக்கான பாராட்டு நிகழச்சி ஆகியவை நடைபெற்றது. சவுபாக்கியா திருமண மணடபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுசெயலாளர் டாக்டர் த,ஆறம், மாவட்ட செயலாளர் பேராசிரியர் ரகு அந்தோணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் பேராசிரியர் சத்தியபாலன், விருதுநகர் மாவட்ட செயலாளார் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கலைமாமணி விருது பெற்ற அமலபுஷ்பம், திரைப்பட இயக்குனர் வரதன் செல்லப்பா, பண்பலை […]