கோவில்பட்டியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்
![கோவில்பட்டியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/07/kvpdoctors.jpg)
இன்று ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மந்திதோப்பு ஊராட்சி செயலர் பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.
மரக்கன்றுகள் நடும் பணியை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு, இந்திய மருத்துவர்கள் சங்க மூத்த நிர்வாகி டாக்டர் சீனிவாசன், ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/07/706ea9d9-b7b3-4be1-a3ac-794dd79660fc-1024x525.jpg)
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் அகத்தியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மருத்துவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் பத்மாவதி, கோமதி, கமலா மாரியம்மாள், சிவநாராயணன், விஜய், கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)