Month: June 2022

கோவில்பட்டி

குழந்தையிடம் நகை திருடிய பூசாரி சிக்கினார்

கோவில்பட்டி ஆலம்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் எட்டையாபுரம் கடலையூரை சேர்ந்த அய்யாத்துரை மனைவி முனீஸ்வரி (வயது 28) என்பவர் தனது குழந்தைக்கு காது குத்துவதற்காக வந்தார். அப்போது கோவிலில் வைத்து அவரது குழந்தை அணிந்திருந்த 3¼ சவரன் தங்க நகை திருட்டு போனது.இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அக்கோவிலில் பூசாரியாக உள்ள சுப்பிரமணியன் (61) என்பவர் முனீஸ்வரி குழந்தையிடமிருந்து தங்க நகையை திருடியது […]

தூத்துக்குடி

பா.ஜனதாவில் இணைந்ததாக கூறப்பட்ட 13 ஊராட்சி மன்ற தலைவர்கள், கனிமொழி எம்.பி.யுடன் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி லாரி செட்டில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள் ; உரிமையாளருக்கு அபராதம்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்புகள் கோவில்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றை டீ கடைக்காரர்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் காஜா நஜிமுதீன் தலைமையில் ஒரு குழுவினர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள லாரி செட்டுகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு லாரி செட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையிலான […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.உறுப்பினர் வெளிநடப்பு; பொதுமக்களுடன் சாலை மறியல்

கோவில்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார்அதற்கு பதிலளித்த தலைவர் கருணாநிதி , அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதாவது:-நகராட்சிக்கு […]

செய்திகள்

அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுகள் ரகசியம்-துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபிறகு கட்சியின் அமைப்புசெயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-65 தலைமைக்கழக நிர்வாகிகள்ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரது பதவி அதாவது பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு, கழக சட்டதிட்ட விதிகளில் இடமிருக்கின்ற சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்தவேண்டும் என்ற வகையில், எடப்பாடி பழனிசாமியை அதாவது கழக தலைமை நிலைய செயலாளரை, தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும், […]

கோவில்பட்டி

சமூகநீதியை கொண்டு வந்தது தி.மு.க.- அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி மற்றும் மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி வரவேற்றார். மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினார்கள்.கூட்டத்தில் மகளிர் அணி, மாணவர் அணியினரிடம் அமைச்சர் கீதாஜீவன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்; 764 வழக்குகளுக்கு தீர்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் சப்-கோர்ட்டு நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிபதிகள் கடற்கரை செல்வம், பீட்டர், முகமது சாதிக் உசேன் ஆகியோர் நடத்தினார்கள்.அரசு வக்கீல் சம்பத்குமார், வக்கீல்கள் சந்திரசேகர், பாப்புராஜ், மோகன்தாஸ், சிவகுமார், நாகராஜன், சுந்தரபாண்டியன் மற்றும் சட்டப் பணிகள் உதவியாளர்கள் ஜோன்ஸ் இமானுவேல், மரிக்கொழுந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.நேற்று ஒரே நாளில் 1,757 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் வங்கி வராக்கடன், கல்விக் கடன் வழக்குகள் 19, […]

தூத்துக்குடி

காவல்துறையினருக்கான உதவி ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் 563 பேர் எழுதினர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு துறை ரீதியாக விண்ணப்பித்த 104 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 705 காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.தேர்வு எழுதும் மையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இத்தேர்வில் 104 பெண் விண்ணப்பதாரர்களுக்கு 78 பேரும், 601 ஆண் விண்ணப்பதாரர்களில் 485 பேரும் தேர்வில் கலந்து கொண்டனர். […]

செய்திகள்

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்; டி.ஜி.பி.யிடம் புகார்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக சி.வி. சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசி வருகிறார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு மர்ம நபர்களிடம் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மேலும் வாட்ஸப் […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் மன உளைச்சல்-டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவு பெறுவது நல்லது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார்.யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் […]