காவல்துறையினருக்கான உதவி ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் 563 பேர் எழுதினர்
![காவல்துறையினருக்கான உதவி ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் 563 பேர் எழுதினர்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/IMG-20220626-WA0041-850x459.jpg)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு துறை ரீதியாக விண்ணப்பித்த 104 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 705 காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
தேர்வு எழுதும் மையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இத்தேர்வில் 104 பெண் விண்ணப்பதாரர்களுக்கு 78 பேரும், 601 ஆண் விண்ணப்பதாரர்களில் 485 பேரும் தேர்வில் கலந்து கொண்டனர். மொத்த 705 விண்ணப்பதாரர்களுக்கு 563 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 142 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)