• May 19, 2024

Month: May 2022

தூத்துக்குடி

கோவில் கொடை விழா: வேட்டைக்கு சென்ற சாமியாடி கிணற்றில் விழுந்து சாவு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவுக்கு மேல் 1.30 மணி அளவில் சாமக்கொடை நடைபெற்றது.அப்போது தெய்வச் செயல்புரத்தை சேர்ந்த சாமியாடியான முருகன் (வயது 65) என்பவர் வேட்டைக்கு புறப்பட்டு சென்றார். சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்கு சென்றனர்.அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை […]

செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் 13 -ந் தேதி தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் […]

செய்திகள்

மனைவி, மகள், மகனை கழுத்தை அறுத்து கொன்ற ஐ.டி.ஊழியர் தற்கொலை

சென்னை ,பல்லாவரம் அருகே பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். ஐ.டி.ஊழியர். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு நித்ய ஸ்ரீ (வயது 13) என்ற மகளும், ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மரம் அருக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த பல்லாவர்ம் போலீசார் சம்பவம் இடம் சென்று 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை; 2 பேர் கைது

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மூக்கையா மகன் மாரிசெல்வம் (21) மற்றும் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சங்கர் குரு (35) என்பதும், […]

செய்திகள்

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ் நஷீர் கான் வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கே. நைனா முஹம்மது தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. அப்பாஸ் மந்திரி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் எஸ் நாசர் அறிமுகம் செய்தார்.சிறப்புவிருந்தினராக பரமக்குடி, அரசு கலைக்கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் […]

செய்திகள்

2020-21 ம் ஆண்டில் அதிக வருமானம் பெற்ற மாநில கட்சி தி.மு.க.; அ.தி.மு.க.

தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.அக்டோபர் 31, 2021 வரை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக இருந்த போதிலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 54 மாநில கட்சிகளில் 23 கட்சிகளின் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் கிடைக்காத கட்சிகள் ஆகும். ஜனநாயக […]

செய்திகள்

வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தவர் வெட்டிக்கொலை

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் பீமாநகரை சேர்ந்தவர் விஜய காம்பிளி (வயது 25). இந்து மதத்தை சேர்ந்த காம்பிளியும் அதே பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.இருவரின் காதலுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு பீமாநகர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே விஜய காம்பிளி சென்றபோது அவரை வழிமறித்த பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டு பெண்ணை காதலிப்பதை […]

செய்திகள்

அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தின் அருகே உள்ள பெருமாள் கோவில் வட்டம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் பல ஏக்கர் உள்ளது. வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கும் நபர்களுக்கும், தும்பேரி பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பெருமாள் கோவில் வட்டத்தில் இடம் ஒதுக்க வருவாய்த்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.இதனை அறிந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு இப்பகுதியில் இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கால்நடை மற்றும் இதர வகை […]

செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்- மந்திரி சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை

கடந்த 1993 முதல் 2006 ம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக அரியானா முன்னாள் முதல்- மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டுமார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; விளாத்திகுளம் அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு

விளாத்திகுளம் அருகே உள்ள வி. வேடப்பட்டி கிராமத்தில் பருத்தி, மிளகாய், முருங்கை, எலுமிச்சை, தென்னை, கொய்யா, பனை, வாழை, பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.மிக வளமையான வைப்பாறு ஆற்றுப்படுகை கொண்ட வண்டல் மண் வளம் கொழித்து கொண்டு உள்ளது. இந்த வளமையான மண்ணில் விவசாயத்தை சீரழிக்கும் வகையில் தனியார் காற்றாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே வேடப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் காற்றாலை நிறுவ தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேற்படி தீர்மானத்தின் […]