டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ் நஷீர் கான் வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கே. நைனா முஹம்மது தலைமை தாங்கி பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. அப்பாஸ் மந்திரி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் எஸ் நாசர் அறிமுகம் செய்தார்.
சிறப்புவிருந்தினராக பரமக்குடி, அரசு கலைக்கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் டி. கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியின் போது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 250 மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர்கள் ஷம்சுதீன் இப்ராஹிம், பவுசியா சுல்தானா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். உதவிப்பேராசிரியர் முனைவர் ஜாஹிர் உசேன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முடிவில் உதவிப்பேராசியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.